ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை... தேசியக் கொடியை உயர்த்திக் காட்டியதால் ஆத்திரம்..
ஆப்கானிஸ்தான் கொடியை உயர்த்திக் காட்டியதற்காக, ஜகீதுல்லா நசீர்ஜாதா (Zahidullah Nazirzada) என்ற பத்திரிக்கையாளர் தாலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல், கடந்த வாரத்தில் தாலிபான்கள் வடபகுதியை பிடித்தபோது, ஹிஜாப் அணிய மறுத்த பெண்ணை சுட்டுக்கொன்றதாக புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தாலிபான்களின் ஆட்சிக்குப் பயந்து ஆப்கானிஸ்தானை விட்டு எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என ஆயிரக் கணக்கானோர் விமான நிலையத்தை நோக்கி வருகின்றனர். அவர்களை கசையாலும், கூர்மையான கம்புளாலும் அடித்து தாலிபான்கள் விரட்டியதில் சிறுவர்கள் படுகாயமடைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதேபோல, பெண்கள், சிறுவர்களுடன் அமர்ந்திருந்த நபரை தடியால் அடித்து விரட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இரும்பு கேட்டின் கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டு, தாலிபான்கள் வருகிறார்கள், காப்பாற்றுங்கள் என, காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க வீரர்களை பார்த்து சிறுமி ஒருவர் கதறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஜலாலாபத் மற்றும் ஹெஸ்ட் நகரங்களில், பழைய ஆப்கானிஸ்தான் கொடியுடன் பேரணியாகச் சென்றவர்கள் மீது தாலிபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.
இதேபோல, பழைய ஆப்கானிஸ்தான் கொடியை உயர்த்திக் காட்டியதற்காக, ஜகீதுல்லா நசீர்ஜாதா (Zahidullah Nazirzada) என்ற பத்திரிக்கையாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காபூலில் ஏற்பட்ட குழப்பத்தினபோது திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை வீடு வீடாக சென்று தாலிபான்கள் தேடியதாகவும், வீடுகளில் இருந்து இழுத்து வந்து முகத்தில் கரி பூசி, டிரக்குகளில் கட்டி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டதாகவும், துப்பாக்கி முனையில் வீதிகளில் வைத்து தண்டனை கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரத்தில் தாலிபான்கள் வடபகுதியை பிடித்தபோது, ஹிஜாப் அணிய மறுத்த பெண்ணை சுட்டுக்கொன்றதாக புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதபோல, தாலிபான்கள் வீட்டுக் கதவை எட்டி உதைத்து, ஒருவரை இழுத்துச் செல்லும் வீடியோ காட்சி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோல, கையில் துப்பாக்கிகளுடன் தாலிபான்கள் நகரங்களில் ரோந்து செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
அமெரிக்கப்படைகளுக்கு மொழிபெயர்ப்பாளர்களாக பணிபுரிந்தவர்கள், ஆசிரியைகளாக பணிபுரிந்தவர்களும் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அதுதொடர்பான உதவி கேட்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
இதேபோல சமைத்துத் தர மறுத்த பெண்ணை அடித்தே கொன்றதாகவும், அவரது வீட்டின் மீது கையெறி குண்டு வீசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து வேகவேகமாக தப்பிஓடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
Comments