சென்னையில் உள்ள தொல்லியல்துறை கல்வெட்டியல் கிளையை, தமிழ் கல்வெட்டியல் கிளை என பெயர் மாற்றம் உத்தரவு..

0 2864
சென்னையில் உள்ள தொல்லியல்துறை கல்வெட்டியல் கிளையை, தமிழ் கல்வெட்டியல் கிளை என பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுக்களை, சென்னை தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு 6 மாதத்திற்குள் மாற்ற ஆணையிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்த  நீதிபதிகள், கிருபாகரன், துரைசாமி அமர்வு, தமிழ் தொடர்பான அனைத்து ஆவணங்கள், தமிழ் கல்வெட்டுகள் போன்ற அனைத்தையும் சென்னை தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு 6  மாதத்திற்குள் மாற்ற தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டனர்.

தொல்லியல்துறையில் கல்வெட்டியல் உள்ளிட்ட பிரிவுகளில் போதுமான அளவு நிபுணர்களை பணியமர்த்த வேண்டும், சென்னையில் தமிழ் கல்வெட்டியல் பிரிவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 6 மாதத்திற்குள்ளாக செய்து தர வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments