மாணவர்களை ஊக்குவிக்க ரூ 200 கோடியில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

0 2973
மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப் பேரவையில் தெரிவித்தார்.

மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப் பேரவையில் தெரிவித்தார்.

கடந்த ஒன்றரை வருடமாக மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில் திடீரென பள்ளிக்கு வந்தால் மாணவர்களுக்கு, ஆசிரியர்களால் கற்றுக்கொடுக்கமுடியாத நிலை ஏற்படும்.

மேலும் கற்றுக்கொள்வதிலும் சிரமம் இருக்கும்.அத்துடன்  தற்போது குழந்தை திருமணங்களும், குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை திருத்தம் செய்வதற்கு இந்த நிதியாண்டில் முதல் நிதி ஒதுக்கீடாக 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் செயல்படும் என்று அவர் கூறினார். 

அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கம் கொடுக்கும் வகையில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments