மலேசியாவின் புதிய பிரதமராகிறார் இஸ்மாயில் சப்ரி யாக்கூப்?
மலேசியாவின் முன்னாள் துணை பிரதமரான இஸ்மாயில் சப்ரி யாக்கூப் நாட்டின் அடுத்த பிரதமராக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளன.
17 மாதங்கள் பிரதமராக இருந்த முஹியித்தீன் யாசீன், தமது கூட்டணியிலேயே பெரும்பான்மை ஆதரவை இழந்ததால், கடந்த 16 ஆம் தேதி ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அந்த கூட்டணியில் உள்ள ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கட்சியின் தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் சப்ரி யாக்கூபுக்கு மொத்தம் உள்ள 222 எம்பிக்களில் 114 பேரின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்மாயிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்பிக்கள் மன்னர் அல் சுல்தான் அப்துல்லாவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவிக்க உள்ளனர். அதன்பின்னர் மன்னர், இஸ்மாயிலை பிரதமராக முறைப்படி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments