ரஷ்யாவில் நடந்து வரும் உலக இளையோர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர்: ஒரேநாளில் இந்தியாவுக்கு 1 வெள்ளி உள்பட 4 பதக்கங்கள்

0 3924

ரஷ்யாவில் நடந்து வரும் உலக இளையோர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 1 வெள்ளி உள்பட 4 பதக்கங்கள் கிடைத்தன.

Ufa நகரில் நடந்த 61 கிலோ எடைப் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் ரவீந்தர் குமார், ஈரான் வீரரிடம் 9-க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவி வெள்ளி வென்றார்.

அதேபோல் இந்திய வீரர்கள் யாஷ், பிருத்விராஜ் பாட்டீல், அனிரூத் குமார் ஆகியோர் முறையே 74, 92, மற்றும் 125 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றனர். மகளிர் தரப்பில் இந்திய வீராங்கனை பிபாஷா  76 கிலோ எடைப் பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments