"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஜப்பானில் நடைபெறவிருந்த பார்முலா ஒன் கார் பந்தயம் ரத்து
ஜப்பானில் நடத்த திட்டமிட்டிருந்த கிராண்ட் ஃப்ரீ கார் பந்தயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், அங்கு பாராலிம்பிக் போட்டிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளன. மேலும், அக்டோபர் 10ம் தேதி கிராண்ட் ஃப்ரீ கார் பந்தயம் நடக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், டோக்கியோ உள்ளிட்ட சில நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றை காரணம் காட்டி கிராண்ட் ஃப்ரீ பந்தயம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments