ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியோடிய அஷ்ரப் கனி ஓமன் நாட்டில் இருப்பதாக தகவல்
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியோடிய முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி எங்கே சென்றார் என்று தேடி வரும் நிலையில், தற்போது ஓமன் நாட்டில் இருப்பதாகவும், அமெரிக்காவில் குடியேற முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், தாலிபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும், ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றதாகவும், மற்றொரு தரப்பு கஜகஸ்தான் சென்றதாக தகவல் தெரிவித்தது.
ஆனால், தங்கள் நாட்டுக்கு அவர் வரவில்லை என இரு நாடுகளுமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. இதற்கிடையில் அஷ்ரப் கனி உஸ்பெகிஸ்தான் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானதால் ஆப்கானிஸ்தானிய மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆனால் அவர் ஓமனில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Comments