மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் - முதலமைச்சர் உறுதி
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக, சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், இன்று தனது அறிமுக உரையின்போது, கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இருப்பினும், மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்ட கோயம்புத்தூர் மட்டுமல்ல, மதுரையிலும் அத்திட்டம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
Comments