சுனந்தா புஷ்கர் மரணம்: அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் சசி தரூர் விடுவிப்பு

0 2412

அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய 3வது மனைவி சுனந்தா புஷ்கரின் மரண வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் காங்கிரஸ் எம்பி சசி தரூரை டெல்லி நீதிமன்றம் முழுமையாக விடுவித்துள்ளது.

காணொலியில் இந்த தீர்ப்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வழங்கியதும் அவருக்கு நன்றி தெரிவித்த சசி தரூர், ஏழரை ஆண்டுகளாக அனுபவித்த சித்திரவதையில் இருந்து தமக்கு பெரிய ஆசுவாசம் கிடைத்துள்ளதாக கூறினார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி டெல்லி நட்சத்திர விடுதி சூட் அறையில் சுனந்தா புஷ்கர் மர்மான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

மனைவியை தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட 7 பிரிவுகளில்ந டைபெற்ற வழக்கில்  சசி தரூர் மீது விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, அவர் மீது எந்த குற்றமும் இல்லை எனவும், அவர் நிரபராதி எனவும் தெரிவித்துள்ளதாக சசி தரூர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments