தாலிபான்களை இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டுப் பேச்சு: சமாஜ்வாதி எம்.பி. மீது தேசத்துரோக வழக்கு
தாலிபான்களை இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டுப் பேசிய சமாஜ்வாதிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சபிக்குர் ரகுமான் பார்க் மீது உத்தரப்பிரதேசக் காவல்துறை தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது.
பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து இந்தியாவை விடுவிக்க விடுதலைப் போராட்ட வீரர்கள் போராடியதைப் போன்றே ரஷ்யா, அமெரிக்கா ஆகியவற்றின் ஆதிக்கத்தில் இருந்து ஆப்கானிஸ்தானை விடுவிக்கத் தாலிபான்கள் போராடியதாக சபிக்குர் ரகுமான் கருத்துத் தெரிவித்தார்.
இது குறித்து வந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் சம்பல் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். இதேபோன்று முகநூல் வீடியோவில் கருத்துத் தெரிவித்த இருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
Comments