வேதாரண்யம் அருகே ஒரே நாளில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மூதாட்டி

0 3488
வேதாரண்யம் அருகே ஒரே நாளில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மூதாட்டி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஒரே நாளில் இரண்டு டோஸ்  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மூதாட்டியை சுகாதாரத்துறையினர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.

வண்டுவாஞ்சேரியை சேர்ந்த அலமேலு என்ற 70 வயது மூதாட்டி  கடந்த 15 ஆம் தேதி   அங்குள்ள சரபோஜிராஜபுரம் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

பின்னர் மரத்தடியில் ஓய்வெடுத்த நிலையில், ஆண்கள் வரிசையில் கூட்டமில்லாததால் தடுப்பூசி போடாத பெண்கள் அந்த வரிசையில் நிற்குமாறு கூறியுள்ளனர்.

விவரம் தெரியாமல் அந்த வரிசையில் சென்ற அலமேலு மீண்டும் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். சுகாதாரத்துறையினர் உடனுக்குடன் தகவலை கணினியில் பதிவு செய்யாததால் குளறுபடி ஏற்பட்டு ஒரே நாளில் இரண்டு டோஸ் போட்ட சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments