ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக தாலிபான் தலைவர்கள் வருகை
ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து புதிய அரசமைக்க தாலிபான் இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள் அந்நாட்டுக்கு வந்துள்ளனர்.
கத்தார் தலைநகர் தோஹாவில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தாலிபான் இயக்கத் தலைவர்கள் மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்பியுள்ளனர். தாலிபான் அமைப்பின் இணை நிறுவனரும், அதிபர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவருமான முல்லா அப்துல் கனி பராதர் காந்தஹார் வந்து சேர்ந்தார். அங்குள்ள விமானநிலையத்தில் தாலிபான்கள் உற்சாகக் குரல் கொடுத்து அவரை வரவேற்றனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் மக்களை பத்திரமாக வெளியேற்றுவது குறித்தும், அந்நாட்டில் இருந்து சர்வதேசப் படைகளை விலக்கிக் கொள்வது குறித்தும் தாலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மேலும் போரினால் பிரிந்து சென்ற குடும்பங்கள் ஒன்று சேருவதற்காக தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்துள்ளது.
Comments