காபூலில் உள்ள தூதரகங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் - தாலிபன்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்து எந்த ஒரு நாட்டுக்கும் தீவிரவாத ஆபத்து கிடையாது என்று தாலிபன்கள் அறிவித்துள்ளனர்.
காபூலில் செய்தியாளர்களை சந்தித்த தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், அனைத்து நாடுகளுடன் தாங்கள் நல்லுறவைப் பேண விரும்புவதாகத் தெரிவித்தார். ஆப்கானில் தங்களுக்கு எதிராக செயல்பட்ட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விமான நிலையங்களில் காத்திருப்போர் வீடு திரும்பலாம் என கேட்டுக் கொண்ட ஜபியுல்லா, அவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தும் நேராது என உறுதி அளித்தார்.
சர்வதேச ஊடகங்கள் செய்திகளையும் விமர்சனங்களையும் வெளியிடத் தடையில்லை என்ற போதும், தேச நலன்களுக்கு எதிரான செய்திகளை வெளியிடக்கூடாது எனத் தெரிவித்தார்.
பெண்களுக்கு இஸ்லாமிய சட்டத்தின் படி உரிமைகள் வழங்கப்படும் என்றும் அரசு நிர்வாகத்தில் பெண்களும் பங்கேற்க வரலாம் என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
தாங்கள் யாரையும் பழிவாங்கப்போவதில்லை என்றும், உலக நாடுகளின் நம்பிக்கையுடன் அங்கீகாரத்தைக் கோருவதாகவும் ஜபியுல்லா குறிப்பிட்டார். காபூலில் உள்ள தூதரகங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தாலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
Comments