தேர்தல் வாக்குறுதி, பட்ஜெட் தொடர்பாக சட்டமன்றத்தில் காரசார விவாதம்
சட்டமன்றத்தில், பொருளாதாரம் தெரியாத ஒருவர் எத்தனை முறை கேள்வி கேட்பார் என நிதியமைச்சர் கூறியதற்கு, மக்கள் பிரச்சினையை பற்றி பேசவே சட்டப்பேரவைக்கு வந்திருப்பதாகவும், பொருளாதாரம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதி, பட்ஜெட் தொடர்பாக, அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் பதிலளிக்க, சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, "அமைச்சர்கள் சுருக்கமாக விளக்கம் அளித்தால் தான் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதற்கு கூடுதல் நேரம் கிடைக்கும் என்றார்.
அப்போது பேசிய அவை முன்னவர் துரைமுருகன், இதே கருத்தை தாங்கள் ஆட்சியில் இருக்கும்போது 1000 முறை கேட்டிருப்பதாக கூற, அவையில் சிரிப்பலை எழுந்தது.
Comments