28 அடி அகலம் , 133 நீளத்தில் கைரேகையால் வரையப்பட்ட தேசிய கொடி… புதுச்சேரி மாணவிகள் சாதனை..!
ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களை கவுரவிக்கும் வகையில், புதுச்சேரியில் இரண்டு பள்ளி மாணவிகள் 19 மணி நேரத்தில் 28 அடி அகலம் , 133 நீள வெள்ளை துணியில் கைரேகையால் தேசிய கொடியை வரைந்தனர்.
7 ம் வகுப்பு மாணவி தீக்சிதா மற்றும் 3ம் வகுப்பு மாணவி வர்ணிதா ஆகியோர் புதுச்சேரி கடற்கரை சாலையில் இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டனர்.
மாணவிகளின் இந்த சாதனை கலாம் புக் ஆப் ரெக்கார்டஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments