பட்ஜெட் புத்தகங்கள் பழைய பேப்பர் கடைக்கு செல்வதை தவிர்க்கவே இ பட்ஜெட்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பட்ஜெட் புத்தகங்கள் பழைய பேப்பர் கடைக்கு செல்வதை தவிர்க்கவே இ.பட்ஜெட் முறை கொண்டுவரப்பட்டதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தமிழ்நாடு அரசின் காகிதமில்லா பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்தார். அதே வேளையில் பட்ஜெட் புத்தகங்களும் அச்சிடப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த நிதியமைச்சர், பேரவையில் வைக்கப்படும் புத்தகங்களில் 60 முதல் 70 % புத்தகங்களை உறுப்பினர்கள் எடுத்துச் செல்வதில்லை, அவை வீணாக பழைய பேப்பர் கடைக்கு செல்வதாகவும் கூறினார்.
புத்தகம் தேவைப்படும் சட்டமன்ற உறுப்பினர் அதை தலைமைச் செயலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அமைச்சர் பதிலளித்தார்
Comments