தமிழகத்தில் தாலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியிடுபவர்களை மத்திய உளவுத்துறை கண்காணிப்பதாக தகவல்
தமிழ்நாட்டில் தாலிபன்களுக்கு ஆதரவாக சமூக வலைதள பதிவுகளை வெளியிடுவோரின் விவரங்களை மத்திய உளவுத்துறையினர் சேகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதற்கு, தமிழகத்தில் இருந்து ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிடும், அல்லது கருதுதுகளை பகிரும் சமூக வலைதள கணக்குகளின் விவரங்களை மத்திய உளவுத்துறை போலீசார் டெல்லிக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவரங்களின் அடிப்படையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து விசாரணை நடத்துமாறு டெல்லியில் இருந்து தமிழக உளவுத் துறையினருக்கு உத்தரவு வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Comments