அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்த்தேக்கம் வரலாறு காணாத வகையில் நீர் குறைந்தது… 10 மேற்கு மாநிலங்களில் கடும் வறட்சி

0 3202

அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான மீட் நீர்த் தேக்கத்தில் நீரின் இருப்பு வரலாறு காணாத வகையில் குறைந்ததால், மேற்கு மாகாணங்கள் கடும் வறட்சியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதை அடுத்து அதை ஒரு தேசிய வறட்சி பேரிடராக அறிவித்து சிறப்பு நிதி ஒதுக்குமாறு 10 மாநில ஆளுநர்கள் அதிபர் ஜோ பைடனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வறட்சியால் ஒட்டுமொத்த பயிர்களும் கருகுவதுடன், விளைச்சல் குறைந்து பயிரை அழிக்கும் பூச்சிகள் அதிகரிக்கும் என அவர்கள் பைடனுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மீட் நீர்த்தேக்கத்தில் இருப்பு அபாயகரமான அளவுக்கு குறைந்துள்ளதால் அரிசோனா, நெவாடா, மெக்சிகோ ஆகியவற்றுக்கான நீர்ப்பகிர்வு குறையும்.  லாஸ் ஏஞ்சலஸ், சான்டியாகோ, போனிக்ஸ், டஸ்கான் மற்றும் லாஸ் வேகாஸ் ஆகிய நகரங்களில் உள்ள இரண்டரை கோடி மக்களின்  குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மீட் நீர்த்தேக்கம் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments