பிரபாகரனை கைது செய்து அழைத்து சென்ற போலீஸ்..! வரலாறு பேசும் மியூசியம்

0 6503

சென்னை எழும்பூரில் உள்ள, 178 ஆண்டு கால பழமை வாய்ந்த, பழைய காவல் ஆணையர் அலுவலக கட்டிடம், 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, போலீஸ் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பார்வைக்காக திறக்கபடவுள்ள இங்குள்ள பொக்கிஷங்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

தமிழக காவல்துறை மற்றும் சென்னை காவல்துறையின் வரலாற்று சுவடுகளை, நினைவுபடுத்தும் விதமாக,சென்னை எழும்பூரில் உள்ள, 178 ஆண்டு கால பழமை வாய்ந்த, பழைய காவல் ஆணையர் அலுவலக கட்டிடம், 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, போலீஸ் அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் நுழைவாயிலில், மார்பல் கல்லில், மகாத்மா காந்தியின் உருவப்படத்துடன் வன்முறைக்கான மூல காரணங்கள் எவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1837ஆம் ஆண்டு மெட்ராஸ் சென்ட்ரல் சிறைச்சாலை புகைப்படம்,

1870ஆம் ஆண்டு ரோந்து பணிக்காக பயன்பட்ட சீமை வண்டி என்ற சைக்கிள் உள்ளது.

1892ஆம் ஆண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் குதிரையில் வலம் வரும் புகைப்படம்...

1935ஆம் ஆண்டு முதன்முதலாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டதற்கான புகைப்படம்..

1914ம் ஆண்டு நீராவி மூலம் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம்., அதன்பின் 1934 இல் மோட்டார் வாகனமாக மாற்றப்பட்ட இருசக்கர வாகனம் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போது, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட புகைப்படம்.

1982 மே 19ஆம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைது செய்து போலீசார் ((வீதியில்)) அழைத்து செல்லப்படும் புகைப்படம்.. என காவல்துறையினரின் வரலாற்றை சொல்லும் ஏராளமான அரிய புகைப்படங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.

ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது  கொலையாளிகள் நெருங்கி நின்ற புகைப்படங்கள்.!

தமிழக போலீசுக்கு சவாலாக இருந்த சந்தன கடத்தல் வீரப்பன் 2004ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி, ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையிலான போலீசார் சுட்டு வீழ்த்தினர் அதைக் கொண்டாடிய போலீசாரின் புகைப்படம்...

மெட்ராஸ் சென்ட்ரல் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்ட தலைவர்கள் என்று சுபாஷ் சந்திர போஸ், அறிஞர் அண்ணாதுரை, தமிழக முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா, இதுதவிர சங்கராச்சாரியார் ஆகியோர் சிறையில் இருந்த புகைப்படங்கள் உள்ளது

சீரியல் கில்லர் ஆட்டோ சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது போன்ற புகைப்படம்... வெடிகுண்டு நிபுணர் குழுவினர் பயன்படுத்தி வந்த நாட்டு வெடிகுண்டுகள் போன்ற பல்வேறு வகையான வெடிகுண்டுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாத தடுப்பு பணிகளின்போது மட்டுமல்லாமல் முக்கிய நபர்கள் பாதுகாப்பு பணிக்காக எடுத்துச் செல்லப்பட்ட துப்பாக்கி வகைகள்....

பண்டைய காலத்தில் 1798 போன்ற வருடங்களில் பாளையக்காரர்கள் பயன்படுத்திய கூர்மையான ஆயுதங்கள்...

இங்கிலாந்தில் 1889 ஆம் ஆண்டு முதன் முதலாக பயன்படுத்தப்பட்டு வந்த 303 ரக துப்பாக்கி இரண்டாம் உலகப்போரில் ராணுவம் பயன்படுத்தி வந்தது. 303 ரக துப்பாக்கிகள் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு வந்ததற்கான காட்சிகள்...

பொதுமக்கள் பயன்படுத்தி வந்த துப்பாக்கி வகைகளும் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

குற்ற வழக்கில் தொடர்புடைய, ஆண் மற்றும் பெண்களின் அடையாளங்களை காண எவ்வாறு ரேகை எடுக்கப்படுகின்றது என்பது தொடர்பான புகைப்படம்.....

வெவ்வேறு காலகட்டங்களில் கைதிகளின் கைகளில் மாட்டப்பட்ட கை விலங்குகள்...

கோவை, தொண்டாமுத்தூரில் 1914ஆம் அண்டு, ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பழைமையான போலீஸ் ஸ்டேஷனில், கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைக்கதவு, சென்னை போலீஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது..

இவை தவிர சுனாமி, மழைவெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில், சிக்கித் தவித்த மக்களை மீட்பதற்கான சாதனங்கள்.. போன்றவற்றையும் இந்த அருங்காட்சியகத்தில் மக்கள் கண்டுகளிக்கலாம்..! கூடுதல் டிஜிபி அமல்ராஜ் நேரடி மேற்பார்வையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை மாநில போலீஸ் அருங்காட்சியமாக மாற்றும் பணியானது, தீவிர படுத்தப்பட்டு, அதுவும் முழுமை அடையும் தருவாயில் உள்ளது. பணிகள் முழுமையடைந்ததும் இதற்காண பார்வை நேரம் மற்றும் அனுமதி குறித்து அறிவிக்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments