தரமற்ற "எம் சாண்ட்" விற்பனை... அறமற்ற மனிதர்களால் காத்திருக்கும் ஆபத்து.!

0 4934
தரமற்ற "எம் சாண்ட்" விற்பனை... அறமற்ற மனிதர்களால் காத்திருக்கும் ஆபத்து.!

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வரும் 400க்கும் மேற்பட்ட எம்.சாண்ட் நிறுவனங்கள் தரமற்ற எம்.சாண்டை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. தரமற்ற எம்.சாண்டுகளால் கட்டப்படும் கட்டிடங்கள் பின்னாளில் பேராபத்தை விளைவிக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். 

கருங்கல் ஜல்லியை உடைத்து நொறுக்கி அதில் இருந்து தயாரிக்கப்படுவது தான் செயற்கை மணல், அதாவது மேனுஃபாக்சர்டு சாண்ட்  எனப்படும் எம்.சாண்ட்.  ஆற்று மணல் பற்றாக்குறை உச்சத்தைத் தொட்ட சமயத்தில் அதற்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்பட்ட இந்த எம்.சாண்ட், தயாரிப்பின் போது பவுடர் போன்ற கழிவுகள் எல்லாம் தண்ணீரில் வெளியேற்றப்பட்டுவிடும். நல்ல தரமான எம்.சாண்ட் ஆற்று மணலை விட வேகமாக செட் ஆகும் என்றும், உறுதியானதும் என்றும் சொல்லப்படுகிறது. ஆற்று மணலை விட எம்.சாண்ட் 30 முதல் 40 விழுக்காடு வரை விலை குறைவு என்பதும் இதன் முக்கிய அம்சம்.

தமிழ்நாட்டில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்-சாண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. வருவாய்த் துறை மூலம் கல்குவாரி அனுமதி பெற்று இந்த நிறுவனங்கள் எம்-சாண்ட் தயாரித்து விற்கின்றன. அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் தரமான எம்-சாண்ட் விற்கவில்லை என்று புகார்கள் எழுந்ததை அடுத்து, எம்-சாண்ட்டின் தரத்தை நிர்ணயம் செய்து அதற்கான தரச் சான்றிதழை பொதுப்பணித் துறை வழங்கி வருகிறது..

காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தமாக 50 எம்.சாண்ட் நிறுவனங்களுக்கு மட்டுமே பொதுப்பணித்துறையின் தகுதி சான்று வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், உரிய அனுமதி பெறாமல் 406 நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இவை கடினத்தன்மை இல்லாத பாறைகளை உடைத்து கிரஷர் டஸ்ட் எனப்படும் பாறை தூசிகளை கலந்து தரமில்லாத 'எம்.சாண்ட்' விற்பனை செய்கின்றன என்று கூறப்படுகிறது. ஜல்லிகளை உடைக்கும்போது உருவாகும் கழிவுகளைத்தான் கிரஷ்ஷர் டஸ்ட் என்று அழைக்கின்றனர்.

கிரஷர் டஸ்ட்டை அதிகளவில் கலந்து விற்கப்படும் தரமற்ற எம்.சாண்டுகள் ஒருபுறம் என்றால், அந்தக் கிரஷர் டஸ்ட்டையே மிகக் குறைந்த விலைக்கு டன் கணக்கில் வாங்கிச் சென்று தண்ணீரில் நனைத்து, எம்-சாண்ட் என்று ஏமாற்றி சிலர் விற்பனை செய்து வருகின்றனர் என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகை எம்.சாண்டுகளைக் கொண்டு கட்டுமானங்களை எழுப்பினால் பின்னாளில் சிறிய அளவிலான அதிர்ச்சியைக் கூடத் தாங்காமல் கட்டிடங்கள் இடியும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

எனவே மனித உயிர்களோடு விளையாடும் இதுபோன்ற போலி எம்.சாண்டு நிறுவனங்களைக் கண்டறிந்து உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments