தட்டி தட்டி ஊழலை அம்பலப்படுத்திய அசத்தல் எம்.எல்.ஏ... கதறிய காண்டிராக்டர்
திருச்செங்கோடு தொகுதிக்குட்பட்ட நெய்காரப்பட்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பொதுக்கழிப்பிட கட்டிடத்தை ஆய்வு செய்த எம்.எல்.ஏ கொங்கு ஈஸ்வரன், அது தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதை கண்டு பிடித்ததால் கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் ஒப்பந்ததாரர் தவித்தார்.
திருச்செங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ கொங்கு ஈஸ்வரன் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் அந்த தொகுதிக்குட்பட்ட நெய்காரப்பட்டியில் ஊருக்கு ஒதுக்கு புறமாக புதிதாக கட்டிமுடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்ட பொதுக்கழிப்பிடம் ஒன்றை ஆய்வு செய்தார்
அப்போது கட்டிடத்தின் ஒரு முனையில் சிறு கீறல் இருந்தது. அதனை சிறிய கம்பியால் தட்ட அதில் இருந்த சிமெண்டு கலவை சரியில்லாததால் சுவர் உதிர்ந்து வந்தது.
அப்போது அந்த கழிப்பிடத்தை கட்டிய ஒப்பந்ததாரரை அழைத்து சிமெண்டு கலவையில் , ஒரு மூட்டை சிமெண்டுக்கு எத்தனை பாண்டு மணல் சேர்க்கப்பட்டது என்று கேட்டார், ஆனால் தரமற்றை கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரரோ பதில் சொல்ல முயலாமல் தவித்து நின்றார்
ஒப்பந்ததாரரின் முறைகேடு வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததோடு நிற்காமல் அந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் ஏணி வைத்து ஏறி ஆய்வு செய்த ஈஸ்வரனிடம் , தன் தவறை சரி செய்து விடுவதாக அந்த ஒப்பந்ததாரர் ஒப்புக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் இது போன்ற ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டால் ஒப்பந்ததாரர்கள் திருந்தும் நிலை ஏற்படும் என்கின்றனர் பொதுமக்கள்
Comments