நடிகை மீரா மிதுனை காவலில் எடுத்து, மனநல ஆலோசகரை உடன் வைத்து விசாரிக்க திட்டம்

0 4413
நடிகை மீரா மிதுனை காவலில் எடுத்து, மனநல ஆலோசகரை உடன் வைத்து விசாரிக்க திட்டம்

நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மாற்றி, மாற்றி பேசுவதாக கூறியுள்ள சைபர் கிரைம் போலீசார், அவரை காவலில் எடுத்து, மனநல ஆலோசகர் முன்னிலையில் விசாரித்து வாக்குமூலம் பெற முடிவு செய்துள்ளனர்.

பட்டியலின சமூகத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன் மீரா மிதுனிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு, அவர் முழு ஒத்துழைப்பு அளிக்காமல் மாற்றி மாற்றி பேசியதாகவும், போலீசாரைக் கண்டதும் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, மீரா மிதுனை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது, மன நல ஆலோசகரை முன்னிலையில் விசாரித்து வாக்குமூலம் பெற முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments