முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோவில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவர் : உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோவில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அர்ச்சகர்கள் பணிக்குச் சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என இந்து அறநிலையத்துறை கூறியதை எதிர்த்தும், ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரியும் சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்த போது, இதே கோரிக்கையுடைய வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் உள்ளதால் இந்த வழக்கையும் அந்த அமர்வுக்கு மாற்ற வேண்டும் என அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கைத் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப் பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Comments