பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் - மத்திய அரசு
பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்த சர்ச்சை குறித்து ஆராய நடுநிலையான வல்லுநர் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில், உளவு பார்த்ததாக அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளது.
உறுதிமொழிப் பத்திரத்தில் கூறியுள்ள விவரங்கள் திருப்தி அளிக்கவில்லை என்றும், வல்லுநர் குழுவின் செயற்பாட்டு எல்லையைத் தீர்மானித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தேசியப் பாதுகாப்பு அடங்கியுள்ளதாகத் தெரிவித்த அரசு வழக்கறிஞர், நீதிமன்றம் ஒப்புக்கொண்டால் நடுநிலையான வல்லுநர்களைக் கொண்டு சுதந்திரமான ஒரு குழுவை அமைக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக நாளை மீண்டும் விசாரணை நடைபெறும் எனத் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
Comments