தாலிபன்களால் பீதி - தப்ப முயலும் ஆப்கானியர்கள்.!
காபூல் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தில் முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்ற ஆப்கானியர்களை விரட்ட அங்குள்ள அமெரிக்க ராணுவத்தினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
காபூலையும் தாலிபன்கள் கைப்பற்றிய நிலையில் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதை அடுத்து தாலிபன்களால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற அலைமோதிய வண்ணம் உள்ளனர்.இந்த நிலையில், காபூலில் உள்ள அமெரிக்க தூதரக பணியாளர்களை ராணுவ பாதுகாப்புடன் திரும்ப அழைக்கும் ஏற்பாடுகளை அமெரிக்கா செய்துள்ளது.
அதற்காக காபூல் விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் ஏறுவதற்காக நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் முண்டியடித்தனர். விமான டார்மார்க் எனப்படும் தொங்கும் நுழைவு பாதையில் அவர்கள் தொங்கியவாறு விமானத்தில் ஏற முயன்றனர்.இதனால் பாரம் தாங்காமல் அந்த டார்மார்க் வளைந்தது...
விமானத்தில் ஏற முயன்ற ஆப்கானியர்களை விரட்ட அங்கிருந்த அமெரிக்க படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டி விரட்டினர்.இதனிடையே காபூலில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அனைத்து பயணிகள் விமானங்களையும் ரத்து செய்வதாகவும், மக்கள் விமான நிலையங்களில் திரள வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Comments