மருத்துவ மாணவி அதிவேகமாக ஓட்டி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து… 12 வயது சிறுமி உட்பட 5 பேர் காயம்
சென்னை அடுத்த குன்றத்தூரில் மருத்துவக்கல்லூரி மாணவி அதிவேகமாக ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆழ்வார் திருநகர் பகுதியை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவியான காவியா, அவரது நண்பர் அக்சத் என்பவருடன் காரில் பூந்தமல்லி நோக்கி வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, குன்றத்தூர் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பின் மீது ஏறி சாலையோரம் இருந்த வாகனங்கள் மீது மோதி நின்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 12 வயது சிறுமி உட்பட 5 பேர் காயமடைந்த நிலையில், 5 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதனிடையே விபத்துக்கான காரணம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments