15 நாட்களுக்கு பின் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
15 நாட்களுக்கு பின்பு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய ஆடி திருவிழாவில், பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இவ்விழா நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து 15 நாட்களுக்கு பின் பக்தர்கள் கோவில் அருகேவுள்ள அக்னி தீர்த்த கடற்கரையில், நீராடிய பின் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோயிலிலுள்ள 22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் நீராட தடை நீடிப்பதுடன், வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடை தொடருமென கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments