ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக முல்லா அப்துல் கானி பரதார் நியமனம்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின் புதிய இடைக்கால அதிபராக அந்த அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவர் முல்லா அப்துல் கானி பரதார் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
காந்தஹாரில் பிறந்த பரதார், தாலிபான் அமைப்பின் நிறுவனர் ஒற்றைக் கண் முல்லா உமரின் நண்பராக இருந்ததாக நம்பப்படுகிறது. மேலும் 2001 ல் தலிபான்கள் செல்வாக்கு சரிந்ததைத் தொடர்ந்து, இடைக்காலத் தலைவர் ஹமீத் கர்சாயை அணுகிய ஒரு சிறிய குழு கிளர்ச்சியாளர்களில் பரதாரும் இருந்ததாக கூறப்படுகிறது.
Comments