கிராமப் பகுதியில் வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை ; கிராம மக்கள் அச்சம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை கிராமப் பகுதியில் ஒற்றை காட்டு யானை திடீரென உலா வந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக சுற்றித் திரிந்த இந்த யானையை நிரந்தரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேத்துப்பாறை, புலியூர், பாரதி அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களையும், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
Comments