திருமணமான 3 மாதத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் போலீசாருக்கு பயந்து விஷம் உண்டு தற்கொலைக்கு முயற்சி

0 4057
திருமணமான 3 மாதத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் போலீசாருக்கு பயந்து விஷம் உண்டு தற்கொலைக்கு முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே திருமணமான 3ஆவது மாதத்திலேயே இளம் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன், விஷம் உண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், பிடிபட்டிருக்கிறான்.

பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்ட பிரபு என்ற அந்த நபர், கடந்த வெள்ளிக்கிழமை ஊமத்தநாடு பகுதியிலுள்ள கோவிலுக்கு கிடா வெட்டுக்குச் சென்றபோது, மனைவி ஜோதியை கட்டையால் அடித்து கொன்றுவிட்டு தப்பியோடினான். 35 வயதான மணிகண்டபிரபுவுக்கு 19 வயது மனைவி மீதான சந்தேகம் காரணமாகவே கொலை செய்ததாகக் கூறப்பட்டது.

கொலை செய்துவிட்டு தப்பிய மணிகண்ட பிரபு, கையில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் பணத்துக்கு மது வாங்கிக் குடித்ததோடு, போலீசார் எப்படியும் பிடித்துவிடுவார்கள் என்ற பயத்தில் எலி பேஸ்ட் விஷத்தையும் வாங்கி சாப்பிட்டுள்ளான். பின்னர் அரை மயக்கத்தில் தனது அண்ணனுக்கு போன் செய்து கூறவே, போலீசாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். மன உளைச்சல், குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை அடித்து கொலை செய்ததாக போலீசிடம் அவன் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments