சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கியது ஹைதி..! 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
ஹைத்தியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
தென்மேற்கு ஹைத்தியில் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவான பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், இதுவரை 304 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 1800-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த ஹைத்தி பிரதமர் ஏரிஎல் ஹென்ரி ( Ariel Henry) ஒரு மாதம் கால அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில், கிரேஸ் (Grace) என்ற புயல் அடுத்த வாரம் ஹைத்தியை தாக்க வாய்ப்பிருப்பதால், மீட்பு பணிகள் பாதிப்படையும் நிலை உருவாகியுள்ளது.
Comments