'Beast' நாயகி மீது.. 'Burst'ஆன இயக்குநர்..! 12 பேரோடு வருவதாக ஆதங்கம்

0 27830
'Beast' நாயகி மீது.. 'Burst'ஆன இயக்குநர்..! 12 பேரோடு வருவதாக ஆதங்கம்

நடிகர் விஜய்யின் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வரும் நடிகை பூஜாஹெக்டே தன்னுடன் 12 நபர்களை அழைத்து வந்து தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவை இழுத்து விடுவதாக பெப்ஸி தலைவரும் இயக்குனருமான ஆர்.கே. செல்வமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

10 வருடங்களுக்கு முன்பு முகமூடி படத்தின் மூலம் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தவர் நடிகை பூஜாஹெக்டே..! அதன் பின்னர் பூஜா ஹெக்டேவை தமிழ் திரையுலகம் கண்டு கொள்ளாத நிலையில் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் தஞ்சம் புகுந்த அவருக்கு கவுரவ தோற்றத்தில் நடித்த ரங்கஸ்தளம் கைகொடுக்க, ஆல வைண்டபுரம்லூ, ராதேஷ்யாம் போன்ற படங்கள் அவரை கைதூக்கி விட்டதால் தற்போது தமிழின் முன்னணி ஹீரோவான விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நாயகியாக ஜோடியாக நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் பூஜா ஹெக்டே படப்பிடிப்புக்கு தன்னுடன் 12 பேரை அழைத்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்கே செல்வமணி, பெரிய நடிகர்கள் படம் என்றால் படத்தின் மொத்த பட்ஜெட்டில் நடிகர், நடிகைகளுக்கு 55 சதவீதம் சம்பளமாக கொடுக்கப்படுவதாகவும், 16 மணி நேரம் வேலைபார்க்கும் திரைப்பட தொழிலளர்களுக்கு 1 சதவீதம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுவதாகவும் கூறினார்.

குறிப்பாக முகமூடி படத்தில் நாயகியாக நடித்தபோது 2 பேருடன் படப்பிடிப்புக்கு வந்து சென்ற நடிகை பூஜாஹெக்டே, தற்போது 12 பேருடன் படப்பிடிப்புக்கு வந்து தயாரிப்பாளர்களுக்கு கூடுதலாக செலவை இழுத்து விடுவதாக ஆதங்கப்பட்டார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடனான, தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தர தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை என வேதனை தெரிவித்தார்.

நடிகர் சிம்புவிற்கு உதவி செய்யத்தான் முயற்சித்தோம் ஆனால் தற்போது எங்களுக்கே கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது என்று கூறிய ஆர்.கே செல்வமணி தயாரிப்பாளர்கள் தங்களது முதலாளிகள் எனவும் அவர்களின் ஈகோ விற்கு நாங்கள் இடம் கொடுத்து தான் ஆக வேண்டும் என்றும் இந்த பிரச்சனையை நட்பு ரீதியில் சுமுகமாக கடக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments