மூவாயிரத்துக்கு மேற்பட்டோரிடம் 1000 கோடி ரூபாய் மோசடி ; பாப்புலர் நிறுவன இயக்குநர்கள் இருவர் கைது
பொதுமக்களிடம் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாகப் பாப்புலர் நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
கேரளத்திலும் பிற மாநிலங்களிலும் 270 கிளைகளைக் கொண்டிருந்த பாப்புலர் நிதி நிறுவனம் மூவாயிரத்துக்கு மேற்பட்டோரிடம் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது. இது தொடர்பாக 180 வழக்குகள் பதிவான நிலையில் அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது.
இந்த வழக்கில் நிறுவனத்தின் இயக்குநர்களான தாமஸ் டேனியல், ரினு மரியம் ஆகியோரை ஆகஸ்டு 9ஆம் நாள் கைது செய்ததாகவும், ஆகஸ்டு 18 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
Comments