இயற்கை முறையில் சாத்துக்குடி சாகுபடியில் ஈடுபடும் விவசாயி ; அமோக விளைச்சல் கிடைப்பதாக விவசாயி பெருமிதம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இயற்கை முறையில் சாத்துக்குடி சாகுபடி செய்து, வெற்றிகரமாக லாபம் ஈட்டி வருகிறார் விவசாயி ஒருவர்.
ஜெயராஜ் என்ற அந்த விவசாயி, தொடக்க காலத்தில் மற்ற விவசாயிகளைப் போன்றே ரசயான உரங்களைப் பயன்படுத்தி நெல், வாழை உள்ளிட்டவற்றைப் பயிரிட்டு வந்துள்ளார்.
காலப்போக்கில் மண்ணின் தன்மை சீர்குலைந்து விளைச்சலும் பாதிக்கப்பட்டதாகக் கூறும் ஜெயராஜ், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரது யோசனையின் பேரில் இயற்கை முறை சாத்துக்குடி சாகுபடியில் இறங்கியுள்ளார்.
5 ஆண்டுகளுக்கு முன் சுமார் 120 சாத்துக்குடி மரக்கன்றுகளை ஒரு ஏக்கரில் பயிரிட்ட நிலையில், கடந்த ஆண்டு காய்ப்புக்கு வந்துள்ளது. ஆண்டுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிலோ வரை சாத்துக்குடி கிடைக்கும் என்று கூறும் விவசாயி ஜெயராஜ் கிலோ 70 ரூபாய் என அவரே நேரடி விற்பனையிலும் ஈடுபட்டு லாபம் பார்த்து வருகிறார்.
Comments