கோடை வெயில் வாட்டுவதால் விலங்குகள் அவதி ; கலைமான்களுக்கு மின்விசிறி, கரடிகளுக்கு ஏ.சி வசதி
அமெரிக்காவின் மாசச்சியூசெட்ஸ் மாகாணத்தில் 32 டிகிரி வரை வெயில் வாட்டுவதால் ஸ்டோன் உயிரியல் பூங்காவில் விலங்குகள் வெப்பத்தை தணிக்க பூங்கா ஊழியர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
காட்டெருதுகள் மீது தினமும் பல முறை தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் பூங்கா ஊழியர்கள், விலங்குகளை குளத்துக்குள் இறங்க வைப்பதற்காக உறையவைக்கப்பட்ட உணவுகளை குளத்துக்குள் வீசுகின்றனர். அங்குள்ள கலைமான்களுக்கு மின்விசிறிகளும், கரடிகளுக்கு ஏ.சி வசதியும் செய்யப்பட்டுள்ளது.
Comments