2 டோஸ் தடுப்பூசி அல்லது RT-PCR நெகடிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே பஞ்சாப் மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் - பஞ்சாப் அரசு
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் அல்லது RT-PCR நெகடிவ் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே வரும் திங்கள் கிழமை முதல் பஞ்சாபுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் பள்ளிகள் திறந்து செயல்படும் நிலையில், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் பள்ளிகளை திறந்த பின்னர் கடந்த வாரம் முதல் மாணவர்களிடம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே பள்ளிகளில் கொரோனா சோதனைகளை அரசு அதிகரித்துள்ளது. பள்ளிகளில் தினமும் குறைந்தது10 ஆயிரம் RT-PCR சோதனைகளை நடத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.((vgfx out))
Comments