சங்கரய்யாவின் வீட்டில் சென்று ”தகைசால் தமிழர் விருது” வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

0 2868
சங்கரய்யாவின் வீட்டில் சென்று ”தகைசால் தமிழர் விருது” வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

விடுதலைப் போராட்ட வீரரும் முதுபெரும் கம்யூனிசத் தலைவருமான சங்கரய்யாவுக்குத் தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யாவின் வீட்டுக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தகைசால் தமிழர் விருதுக்கான பாராட்டுச் சான்றிதழையும், பரிசுத்தொகையாக 10 இலட்ச ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.

விருதுடன் வழங்கப்பட்ட 10 இலட்ச ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சங்கரய்யா அளித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments