பெங்களூர் புகழேந்தியின் அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி இபிஎஸ் , ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

0 2243
பெங்களூர் புகழேந்தியின் அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிக்கை

பெங்களூர் புகழேந்தி தொடுத்த அவதூறு வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி தொடுத்த அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 24ஆம் நாள் ஆஜராக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இருவரும் தாக்கல் செய்துள்ள மனுவில், கட்சியின் கொள்கை, கோட்பாடு ஆகியவற்றுக்கு முரணாகச் செயல்பட்டதால்தான் புகழேந்தியை நீக்கியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுக்கள், விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments