அமெரிக்காவில் மூட நம்பிக்கையால் சொந்த குழந்தைகளை கொன்ற கொடூரன்

0 5153
அமெரிக்காவில் மூட நம்பிக்கையால் சொந்த குழந்தைகளை கொன்ற கொடூரன்

தனது குழந்தைகளின் உடலில் பாம்புகளின் டிஎன்ஏ உள்ளது என்ற மூட நம்பிக்கையால் தனது இரண்டு குழந்தைகளை சுட்டுக் கொன்ற அமெரிக்க நபரை FBI கைது செய்துள்ளது.

மேத்யூ டெய்லர் கோல்மேன் என்ற இந்த நபர், QAnon என்ற சாத்தான் வழிபாட்டு கொள்கை, Illuminati போன்ற பழங்கால ரகசிய சதி முறைகளிலும் நம்பிக்கை கொண்டவன் என கூறப்படுகிறது.

தனது மனைவியிடம் பாம்புகளின் டிஎன்ஏ உள்ளதாகவும் அது தனது இரண்டு குழந்தைகளுக்கும் கிடைத்து அவர்கள் அசுரர்களாக மாறி உலகை அழித்து விடுவார்கள் என தமக்கு ஞான ஒளி கிடைத்ததால், தனது 2 வயது மற்றும் 10 மாத குழந்தையை மெக்சிக்கோவுக்கு கொண்டு சென்று கொலை செய்துள்ளான்.

குழந்தைகளை அவன் சுற்றுலா அழைத்து செல்வதாக கூறியதை நம்பாத அவனது மனைவி அளித்த புகாரில் செல்போன் வாயிலாக அவனை கண்டுபிடித்த FBI அதிகாரிகள் மெக்சிகோவில் இருந்து அவன் அமெரிக்கா திரும்பும் போது கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments