ஒருவாரத்துக்குப் பின் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது ராகுல்காந்தியின் டுவிட்டர் கணக்கு..
ராகுல்காந்தியின் டுவிட்டர் கணக்கு ஒரு வாரக் காலத்துக்குப் பின் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 9 வயதுச் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியபோது எடுத்த படத்தை ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டார். இது விதிமுறைகளை மீறிய செயல் எனக் கூறி ராகுலின் டுவிட்டர் கணக்கை ஒருவாரமாக டுவிட்டர் முடக்கி வைத்தது.
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கும், காங்கிரஸ் தலைவர்கள் பலரின் கணக்குகளும் முடக்கப்பட்டன. மத்திய அரசின் நெருக்குதலாலேயே டுவிட்டர் இவ்வாறு செய்ததாகக் குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் கட்சியினர் இதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது ஜனநாயகக் கட்டமைப்பின் மீதான தாக்குதல் என ராகுல்காந்தி கருத்துத் தெரிவித்தார். இந்நிலையில் அவரது டுவிட்டர் கணக்கு மீண்டும் இன்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
Comments