இந்து கோயில்களை சுற்றி மாட்டிறைச்சி விற்க அனுமதி கிடையாது - அசாம் சட்டப்பேரவையில் மசோதோ நிறைவேற்றம்

0 3737
இந்துக் கோவில்களுக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் மாடுகளை இறைச்சிக்காக கொல்வதையும், மாட்டிறைச்சி விற்பனையையும் தடை செய்வது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய புதிய கால்நடை பாதுகாப்பு மசோதோ, அசாம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்துக்கள், ஜெயினர் மற்றும் சீக்கியர் அடர்ந்து வசிக்கும் இடங்களில் கால்நடைகளை அறுக்கவும் தடை விதிக்கப்படுவதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உரிய ஆவணங்களின்றி கால்நடைகளை மாவட்டம் விட்டு மாவட்டம் கொண்டு செல்வது புதிய சட்டத்தின்படி ஜாமின் இல்லா குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், பாரத் மாதா கீ ஜெய், ஜெய்ஸ்ரீராம் போன்ற முழக்கங்களுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments