கொரோனா 3 ஆம் அலை வீசுவது தவிர்க்க முடியாததா..? மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதித்து 5 பேர் பலி
மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதித்து 5 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனா 3 ஆம் அலை வீசுவது தவிர்க்க முடியாததா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று ரத்னகிரி மாவட்டத்தில் 2 கொரோனா நோயாளிகளும், ரெய்காட், பீட் மற்றும் மும்பையில் தலா ஒருவரும் டெல்டா பிளஸ் வைரசால் உயிரிழந்து விட்டதாக மாநில அரசு தெரிவித்தது.
மும்பையில் இரண்டு டோஸ் தடப்பூசி போட்டுக் கொண்ட 63 வயது பெண்மணி கடந்த மாதம் கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு டெல்டா பிளஸ் மரபணு மாற்ற வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்ததாக அரசு நேற்று முன் தினம் அறிவித்தது.
இதனிடையே மகாராஷ்டிராவில் இதுவரை 66 பேர் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 10 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுவர்கள் என்பதால், தடுப்பூசி பாதுகாப்பையும் மீறி டெல்டா பிளஸ் பரவுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Comments