வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் காணிக்கை
உழவர்களை உயர்த்தி அழகு பார்க்கும் நோக்கத்தோடு வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட்
பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகள் பெறப்பட்டு வேளாண் பட்ஜெட் உருவாக்கப்பட்டது
விவசாயிகளின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டு வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டது
உலகளாவிய வேளாண் வல்லுநர்களின் கருத்துகளை கேட்டும் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது
வேளாண்துறையை சவால்களில் இருந்து மீட்டெடுக்கும் தொலைநோக்கு பார்வையுடன் தனி பட்ஜெட்
உணவு தன்னிறைவைத் தமிழகம் ஓரளவிற்கு எட்டிவிட்டது
உணவுப்பாதுகாப்பையும், ஊட்டச்சத்து பாதுகாப்பையும் அடுத்து 10 வருடங்களுக்குள் அடைந்துவிட வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்
தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பான 60 விழுக்காட்டை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை
தமிழகத்தில் கூடுதலாக 11.75 லட்சம் எக்டர் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு
10 லட்சம் எக்டர் பரப்பளவிலான இருபோக சாகுபடியை அடுத்த 10 வருடங்களில் 20 லட்சம் எக்டராக உயர்த்த இலக்கு
வேளாண் தொகுப்புத் திட்டம், இளைஞர்களை வேளாண் தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட 16 அம்சங்களுடன் பட்ஜெட்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் முதற்கட்டமாக 2500 கிராமங்களில் செயல்படுத்தப்படும்
கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதே கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் முக்கிய அம்சம்
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தில் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்கப்படும்
கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் ரூ.250 கோடியில் செயல்படுத்தப்படும்
முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் - ரூ.146.64 கோடி செலவில் நடைபெறும்
இயற்கை வேளாண்மை வளர்ச்சித்திட்டம் - ரூ.33 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்
நெல் ஜெயராமன் மரபு சார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் - ரூ.25 லட்சம் ஒதுக்கீடு
இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் - ரூ.2.68 கோடி ஒதுக்கீடு
ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் - 2500 இளைஞர்களுக்கு பயிற்சி
ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் - ரூ.5 கோடி ஒதுக்கீடு
பனை மேம்பாட்டு இயக்கம் - 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனைவிதைகள், 1 லட்சம் பனங்கன்றுகள் விநியோகம்
பனை மேம்பாட்டு இயக்கம் - ரூ.3 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
நெல் ஆதரவு விலை - ஒரு குவிண்டால் சன்ன ரகத்திற்கு ரூ.70ல் இருந்து ரூ.100 ஆக உயர்வு
நெல்லுக்கான ஆதரவு விலையை உயர்த்தி வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
ஒரு குவிண்டால் நெல் சன்ன ரகம் ரூ.2060ஆகவும், சாதாரண ரகம் ரூ.2015ஆகவும் கொள்முதல் செய்யப்படும்
தமிழகத்தில் பனைமரங்களை வெட்ட இனி மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம்
நெல் ஆதரவு விலை - ஒரு குவிண்டால் சாதாரண ரகத்திற்கு ரூ.50ல் இருந்து ரூ.75 ஆக உயர்வு
சிறுதானிய இயக்கம் - ரூ.12.44 கோடி நிதி ஒதுக்கீடு
பயறு வகைகளை கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்ய திட்டம்
மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் பயறு வகைகள் சேர்க்கப்படும்
துவரை, உளுந்து, பச்சைப் பயறு போன்றவற்றை 61ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய திட்டம்
பலன் தரும் பயறு உற்பத்தி திட்டம் - ரூ.45.97 கோடி ஒதுக்கீடு
ஏற்றம் தரும் எண்ணெய் வித்துகள் திட்டம் - ரூ.25.13 கோடி ஒதுக்கீடு
நீடித்த நிலையான பருத்தி இயக்கம் - ரூ.16 கோடி ஒதுக்கீடு
சீர்மிகு தென்னை சாகுபடி - தென்னை சாகுபடி பரப்பை அதிகரிக்க 17 லட்சம் தென்னங்கன்றுகள் விநியோகம்
சீர்மிகு தென்னை சாகுபடி திட்டத்திற்கு ரூ.10.20 கோடி ஒதுக்கீடு
அண்ணா பண்ணை மேம்பாடு - ரூ.21.80 கோடி ஒதுக்கீடு
கூட்டுப்பண்ணைத் திட்டம் - 1 லட்சம் விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்படும்
கூட்டுப்பண்ணைத் திட்டம் - ரூ.59.50 கோடி செலவில் நிறைவேற்றப்படும்
அதிக வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம் - ரூ.59.85 கோடி ஒதுக்கீடு
ரூ.2 கோடியில் சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம்
விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்திற்கு ரூ.4508.23 கோடி மின்வாரியத்திற்கு ஒதுக்கீடு
வேளாண் பணிகளை எளிதாக்க 50 ஆயிரம் உழவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்க ரூ.15 கோடி
வேளாண்மையில் சிறப்பாக பணியாற்றும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் திட்டம் - ரூ.6 லட்சம் ஒதுக்கீடு
பயிர் காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2327 கோடி ஒதுக்கீடு
கரும்பு உற்பத்திக்கான ஊக்கத் தொகையாக சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.42.50 வழங்கப்படும்
கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 வீதம் வழங்கப்படும்
கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகை நேரடியாக கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்குக்கு வழங்கப்படும்
ஊக்கத் தொகையால் விவசாயிகள் ஒரு டன் கரும்புக்கு ரூ.2900 வீதம் பெறுவார்கள்
சுமார் 1 லட்சம் கரும்பு விவசாயிகள் பலன் பெற ரூ.138.33 கோடி ஒதுக்கீடு
விவசாயிகள் புதிய வகை கரும்பு வகைகளை சாகுபடி செய்ய ஊக்குவிக்க ரூ.2கோடி
பழப்பயிர் சாகுபடி பரப்பை 3.30 லட்சம் ஹெக்டேராக உயர்த்த 80 லட்சம் பல்வகை பழச்செடிகள் திட்டம்
ரூ.29.12 கோடி செலவில் மத்திய, மாநில அரசுகள் நிதி உதவியுடன் பல்வகை பழச்செடிகள் திட்டம் செயல்படுத்தப்படும்
முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டம் எனும் புதிய திட்டம் அறிமுகம்
பொதுமக்கள் சத்தான காய்கறிகளை தங்கள் வீடுகளிலேயே விளைவிக்க முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி திட்டம்
முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டம் - கிராமப்பகுதிகளில் 2 லட்சம் விதைத் தளைகள் மானியத்தில் விநியோகம்
முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டம் - நகர்பகுதிகளில் 1 லட்சம் மாடித் தோட்டத் தளைகள் மானியத்தில் விநியோகம்
காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக எக்டேருக்கு ரூ.15ஆயிரம் அல்லது இடுபொருட்கள் வழங்கப்படும்
முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத் திட்டம் - ரூ.95 கோடி நிதி
2 லட்சம் குடும்பங்களுக்கு 16 லட்சம் மூலிகைச்செடிகள் வழங்கும் திட்டம் - ரூ.2.18 கோடி நிதி
தோட்டக்கலை முதன்மை மாவட்டங்கள் திட்டத்திற்கு ரூ.12.50 கோடி நிதி
கடலூர் மாவட்டத்தில் பலாவிற்கான சிறப்பு மையம் - ரூ.5 கோடி நிதி
982.48 கோடி ரூபாய் செலவில் 1.50 லட்சம் ஹெக்டர் பரப்பில் சிக்கன நீர்பாசன திட்டம்
ரூ.1 கோடி செலவில் வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்
விவசாயிகளுக்கு 7106 வேளாண் எந்திரங்கள் வழங்க மற்றும் 193 வேளாண் எந்திரங்கள் வாடகை மையம் அமைக்க ரூ.140 கோடி
விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்க வேளாண் இயந்திரங்கள் ரூ.23 கோடியில் கொள்முதல் செய்யப்படும்
முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டம் - ரூ.114.68 கோடி ஒதுக்கப்படும்
மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள் திட்டம் - விவசாயிகளுக்கு ரூ.10ஆயிரம் மானியம்
உழவர் சந்தைகளை புனரமைத்து நவீனப்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு
உழவர் சந்தைகளில் ரூ.2.75 கோடி செலவில் திடக்கழிவு மேலாண்மை செய்து காய்கறி கழிவு உரம் தயாரிக்கப்படும்
நடப்பாண்டில் ரூ.6 கோடி செலவில் 10 உழவர் சந்தைகள் புதியதாக அமைக்கப்படும்
வேளாண் விற்பனை ஒழுங்குமுறை கூடத்தில் 40 விளை பொருட்களுக்கு ஒரே சீராக உறுதி அறிவிக்கை வெளியிடப்படும்
ரூ.10 கோடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு அருகே சேமிப்பு வசதியுடன் விற்பனை நிலையம் அமைக்கப்படும்
ஒட்டன்சத்திரம், பண்ருட்டியில் ரூ.10 கோடியில் காய்கறிகள், பழங்களுக்கான குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்
30 நடமாடும் காய்கனி அங்காடிகள் வாங்க கிராமப்புற இளைஞர்களுக்கு ரூ.2லட்சம் வரை மானியம்
நாமக்கல் மாவட்டம் கொல்லி மலையில் ரூ.50 லட்சம் செலவில் மிளகிற்கான பதப்படுத்தும் மையம்
நீலகிரியில் ரூ.2 கோடி செலவில் ஒருங்கிணைந்த வேளாண் சந்தை வளாகம்
முருங்கை விவசாயிகளுக்கு என்று சிறப்பு ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படும்
கொல்லிமலை மிளகு, பண்ருட்டி பலா, பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை
ரூ.3.50 கோடி மதிப்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உலர்களம் அமைக்கப்படும்
ஏற்றுமதி மூலம் ஏற்றம் காணும் திட்டம் செயல்படுத்தப்படும்
தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலம்
சென்னை கொளத்தூரில் விளை பொருட்களுக்கும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்குமான நவீன விற்பனை மையம்
விளை பொருட்களுக்கு உரிய விலை பெற மின்னணு ஏலத்திற்கு சிறப்பு மென்பொருள்
சந்தை சார்ந்த விவசாயம் திட்டத்தின் மூலம் வேளாண் பொருட்களுக்கு உரிய விலை உறுதி செய்யப்படும்
உணவுப் பதப்படுத்துதலுக்கு என தனி அமைப்பு நடப்பாண்டே துவங்கப்படும்
மீனுக்கு நாகை, தேங்காய்க்கு கோவை, வாழைக்கு திருச்சி, மஞ்சளுக்கு ஈரோடு, சிறு தானியங்களுக்கு விருதுநகர் என தொழில் கற்கும் மையங்கள்
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ரூ.573 கோடி ஒதுக்கீடு
கிருஷ்ணகிரி ஜீனூரில் 150 ஏக்கரில் ரூ.10 கோடி செலவில் தோட்டக்கலை கல்லூரி
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில்100 ஏக்கரில் ரூ.2 கோடியில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம்
நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் - ரூ.3 கோடி ஒதுக்கீடு
தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்
திருச்சி - நாகை மாவட்டங்களுக்கு இடையிலான பகுதி வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக அறிவிப்பு
வேளாண் கடனாக ரூ.1.45 லட்சம் கோடி வழங்க விரிவான திட்டம்
வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.9607 கோடி கடன் வழங்க திட்டம்
நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.27.12 கோடி ஒதுக்கீடு
பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.1.30 கோடி
கறவை மாடுகளுக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை அளிக்க ரூ.14 கோடி
உழவர் சந்தை விலையிலேயே மாநகர் பகுதிகளில் காய்கனி விற்க நடமாடும் அங்காடிகள்
Comments