இரு வேறு தடுப்பூசிகள் எடுத்துக் கொள்வது ஆபத்தானது - சைரஸ் பூனாவாலா
கொரோனாவைத் தடுப்பதற்கு இரு வேறு தடுப்பூசிகள் போடுவது ஆபத்தான முடிவு என சீரம் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு தடுப்பூசி சரியாக இருக்கும்போது ஏன் மற்றதைக் கலந்து சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இரு டோஸ் தடுப்பூசிகளுக்கு இடையிலான காலகட்டத்தை மத்திய அரசு நீட்டித்திருப்பதையும் அவர் விமர்சித்தார்.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 6 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் சைரஸ் பூனவல்லா தெரிவித்துள்ளனர்.
Comments