கோவை: அன்னூர் அருகே கிராம உதவியாளர் காலில் விழுந்த விவகாரத்தில் திருப்பம்

0 38127

கோவை மாவட்டத்தில் பட்டா பெயர் மாறுதலில் நடந்த முறைகேடு தொடர்பாக புகார் அளித்த  விவசாயியை, கிராம உதவியாளர் அடித்து தரையில் உட்காரவைத்து அவமதித்த வீடியோ வெளியாகி உள்ளது. விவசாயியை தாக்கிவிட்டு சாதியை சொல்லி திட்டியதாகக் கூறிய கிராம உதவியாளருக்கு எதிராக விவசாய சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையத்தில் பட்டிலியனத்தவர் என்பதால் கிராம உதவியாளர் முத்துச்சாமியை, விவசாயி கோபால்சாமியின் காலில் விழவைத்ததாக வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் பரவியது.

இந்த காட்சிகள் தொடர்பாக விசாரிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில், இது தொடர்பாக விசாரித்த அதிகாரிகள் , விவசாயி கோபல்சாமி தரப்பு விளக்கத்தை கேட்காமல், கிராம நிர்வாக அலுவலரின் பேச்சைக்கேட்டு, கிராம உதவியாளர் முத்துசாமிக்கு எதிராக சாதிய வன்கொடுமை நடந்தது உண்மை என்று தவறான அறிக்கையை அளித்தனர்.

இதனை நம்பி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதால் கோபால் சாமி மீது சாதிய தீண்டமை வன்கொடுமை, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது என இரு வழக்குகளை அன்னூர் காவல் துறையினர் பதிவு செய்தனர். அதே நேரத்தில் கோபால்சாமி தாக்கப்பட்டதாக அளித்த புகாரை நிராகரித்ததோடு, கிராம உதவியாளர் முத்துச்சாமி, விவசாயி கோபால்சாமியை தாக்கியதற்கு ஆதாரம் இல்லை எனவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் விவசாயி கோபால்சாமியை , முத்துச்சாமி அடித்து தரையில் உட்காரவைத்து அவமதிக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனது தந்தையின் பெயரில் உள்ள சொத்தை கையூட்டு பெற்றுக் கொண்டு வேறு பெயருக்கு மாற்றிக் கொடுத்து விட்டீர்களே என்று கிராம நிர்வாக அதிகாரியிடம் நியாயம் கேட்கும் விவசாயி கோபல்சாமியை நோக்கி ஓடிவரும் கிராம உதவியாளர் முத்துச்சாமி, ஆபாசாமகவும் அறுவெறுக்கதக்கவகையிலும் பேசி கோபால்சாமியை கன்னத்தில் தாக்கி தரையில் அமரவைத்து விட்டு செல்வது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது.

அப்போது கூட கிராம உதவியாளரை கண்டிக்க மறுத்து கீழே அமர்ந்துள்ள விவசாயியிடம் குரலை உயர்த்தும் கிராம நிர்வாக அலுவலர், அவரை மேலே எழுந்து உட்கார சொல்லும் காட்சி உள்ளது, எங்கேயும் கோபால்சாமி சாதி பெயரை சொல்லி திட்டிய காட்சி இல்லை.

கோபால்சாமியை அடித்து விட்டு முதலில் எதற்கெடுத்தாலும் காசு வங்கிட்டோம், காசு வாங்கிட்டோம்ன்னு கோபால் சாமி சொல்கிறார் என்று திட்டிக் கொண்டே வெளியே செல்லும் முத்துச்சாமி, வீடியோ எடுக்கும் அந்த இருவரிடமும் பேசிவிட்டு திரும்ப வந்து சாதியை சொல்லி கோபால்சாமி திட்டுவதாக மாற்றிக்கூறுவதும் அந்த வீடியோவில் உள்ளது.

இந்த வழக்கில் பிசிஆர் சட்டபிரிவை ஆயுதமாக்குவதற்காக, காலில் விழுந்து கும்பிட்டு நாடகமாடியதோடு, பொய்யாக சாதிய தீண்டமை புகார் தெரிவித்த கிராம உதவியாளர் முத்துச்சாமி, பட்டா பெயர் மாறுதலில் முறைகேடு புகாருக்குள்ளாகியுள்ள பெண் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மீது இந்த வீடியோ அடிப்படையில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments