சுவாசக் கோளாறால் மதுரை ஆதீனம் மருத்துவமனையில் அனுமதி ; மதுரை ஆதீனத்தின் அறையைப் பூட்டி சீல் வைத்த தருமபுர ஆதீனம்

0 2610
மதுரை ஆதீனத்தின் அறையைப் பூட்டி சீல் வைத்த தருமபுர ஆதீனம்

சுவாசக் கோளாறு காரணமாக மதுரை ஆதீனம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரது அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் மதுரை ஆதீனம் ஞானசம்பந்த அருணகிரிநாதரை தருமபுர ஆதீனம் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உள்ள மதுரை ஆதீனத்தின் அறை தருமபுரி ஆதீனம் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

தருமபுர ஆதீனத்திற்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்டவர்கள் மதுரை ஆதின மட வளாகத்தில் இருக்கும் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆதீனம் நீண்ட காலம் மடத்திற்கு வராமல் இருந்தால் அவரது அறைக்கு சீல் வைப்பது வழக்கம்தான் என தருமபுர ஆதீனம் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments