"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சிவகங்கையில் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களுக்குள் அடிதடி
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான மாதாந்திர கூட்டத்தில் அதிமுகவினர் இடையே கடும் மோதல் உருவாகி அடிதடி ஏற்பட்டது.
13ஆவது வார்டு அதிமுக கவுன்சிலரான மகேஸ்வரன், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த திட்டப் பணிகளும் நிறைவேற்றப்படுவதில்லை என அதிமுக ஊராட்சி ஒன்றியத் தலைவி ராஜேஸ்வரியை குற்றம்சாட்டி கூட்டத்தில் பேசினார்.
உதவி கேட்டு ஊராட்சி ஒன்றியத் தலைவியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றால் பெரும்பாலும் அவரது கணவரே செல்போனை எடுப்பதாக கூறி அவர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
அப்போது, 12-வது வார்டு அதிமுக கவுன்சிலரான மனோகரன் ராஜேஸ்வரிக்கு ஆதரவாக பேசவே வாக்குவாதம் மோதலாக மாறியது. மனோகரன், மகேஸ்வரன் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
Comments