ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது ஐ.பி.எல்..! துபாய்க்கு புறப்பட்டு சென்றனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்

0 2430
துபாய்க்கு புறப்பட்டு சென்றனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பதற்காக மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், விமானத்தில் துபாய்க்கு புறப்பட்டு சென்றனர்.

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டத்தை அடுத்து போட்டி தள்ளி வைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ள லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments