நிலச்சரிவால் சந்திரபாகா ஆற்றின் நீரோட்டம் தடைபட்டது ; அடைப்பு உடைந்தால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என அச்சம்
இமாச்சலப் பிரதேசத்தில் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றின் நீரோட்டம் தடைபட்டதால் ஆற்றங் கரையோரப் பகுதிகளில் இருந்து இரண்டாயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
லகால் ஸ்பிடி மாவட்டத்தில் மலைப் பகுதியில் மண் சரிந்து விழுந்தது. இதனால் உயிரிழப்போ பொருட்சேதமோ ஏற்படவில்லை எனினும் நிலச்சரிவால் சந்திரபாகா ஆற்றின் நீரோட்டம் தடைபட்டது.
ஆற்றின் குறுக்கே உள்ள அடைப்பு திடீரென உடைந்தால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் எனக் கருதிக் கரையோரமுள்ள 13 ஊர்களில் இருந்து இரண்டாயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டனர். அடைப்பின் ஒரு பகுதி உடைந்து அவ்வழியாக நீர் வெளியேறியதால் வெள்ள அபாயம் நீங்கியதாக முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
Comments