சிலம்பரசன் நடிக்கும் படப்பிடிப்புகளுக்கு பிரச்சனை தருகிறார்கள் - உஷா ராஜேந்தர் புகார்
நடிகர் சிலம்பரசன் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் விவகாரத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு கப்பம் கட்ட சொல்கின்றனர் என சிலம்பரசனின் தாயார் உஷா ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தில் நடித்த சிலம்பரசனுக்கும் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சிம்பு நடித்து வரும் “வெந்து தணிந்தது காடு” படப்பிடிப்பை நடத்த விடாமல் மைக்கேல் ராயப்பன் தரப்பு பிரச்சனை செய்வதாகவும் இதில் தயாரிப்பாளர் சங்கத்தினரோடு ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியும் சேர்ந்து படத்துக்கு ரெட் கார்ட் போட முயற்சிக்கின்றனர் என்றும் உஷா ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.
Comments